1 00:00:11,094 --> 00:00:14,097 லோர்ன் மைக்கெல்ஸ் வழங்கும் 2 00:01:10,654 --> 00:01:12,573 மெலிசா 3 00:01:12,656 --> 00:01:15,868 தள்ளு! ஆம்! இதோ வருகிறது! 4 00:01:15,951 --> 00:01:18,328 சரி, இன்னொரு முறை நன்றாக தள்ளு! 5 00:01:18,412 --> 00:01:20,247 உன்னால் முடியும், ஹோலி! 6 00:01:20,330 --> 00:01:21,874 அவளால் முடியுமென்று சொல்லுங்கள், டெட். 7 00:01:23,208 --> 00:01:26,211 சரி, உன்னால் முடியுமென்று டெட் சொல்கிறார், ஹோலி! ஆம். 8 00:01:26,295 --> 00:01:28,213 ஜோஷ் 9 00:01:37,139 --> 00:01:39,057 அவர்கள் சந்தித்த இரவு 10 00:01:54,990 --> 00:01:56,617 நான் வழக்கமாக அதை உதைப்பேன். 11 00:01:56,700 --> 00:01:57,993 -ம், நிஜமாகவா? -ஆம். 12 00:01:59,036 --> 00:02:00,162 அங்கே. 13 00:02:01,163 --> 00:02:03,582 நீ விரும்பினால், உனக்காக நான் அதை செய்கிறேன். 14 00:02:03,665 --> 00:02:06,752 வேண்டாம், மூன்றாம் வகுப்பு முதல் நானேதான் உதைக்கிறேன், எனவே... 15 00:02:09,086 --> 00:02:12,799 ஒரு உதையில் மாயாஜாலம் நடக்குமா என்ன? 16 00:02:12,883 --> 00:02:13,800 ம். 17 00:02:33,529 --> 00:02:35,447 சரியாக ஒரு வருடம் கழித்து 18 00:02:35,531 --> 00:02:37,115 ஜோஷ். 19 00:02:37,199 --> 00:02:39,868 எனது வாழ்க்கையின் சிறந்த ஆண்டு இதுதான். 20 00:02:39,952 --> 00:02:43,121 என்னுடன் பலவற்றில் ஒத்துப்போகும் ஒருவரை சந்திப்பேன் என்று என்றும் நினைத்ததில்லை. 21 00:02:43,872 --> 00:02:47,709 என்னை ஒரு சாம்பியனாக, நம்பகமானவராக நீ என்னை உணரவைக்கிறாய். 22 00:02:47,793 --> 00:02:52,130 உன்னிடம் நான் எதுவும் சொல்ல முடியும், நீ எப்போதும் என்னை ஆதரிக்கிறாய். 23 00:02:52,714 --> 00:02:55,592 நான் உன்னை நேசிக்கிறேன். இதோ நமக்காக. 24 00:02:56,635 --> 00:02:57,761 நானும்தான். 25 00:02:59,137 --> 00:02:59,972 என்ன? 26 00:03:00,556 --> 00:03:02,015 "நானும்தான்"? 27 00:03:02,099 --> 00:03:04,643 ஆம். இப்போது நாம் இடிக்கலாமா? 28 00:03:04,726 --> 00:03:06,103 இது முதலாம் ஆண்டு நிறைவு நாள். 29 00:03:06,186 --> 00:03:09,481 நான் இன்னும் கொஞ்சம் சிறப்பான ஒன்றை எதிர்பார்த்தேன். 30 00:03:10,732 --> 00:03:13,694 குறுக்கிடுவதற்கு மன்னிக்கவும். இனிப்பு தட்டை பார்க்க வேண்டுமா? 31 00:03:14,653 --> 00:03:15,779 நிச்சயமாக, ஏன் கூடாது? 32 00:03:20,534 --> 00:03:22,035 நிறைவு நாள் வாழ்த்துக்கள். 33 00:03:23,579 --> 00:03:25,747 சரியாக மூன்று ஆண்டுகள் கழித்து 34 00:03:43,432 --> 00:03:46,185 ஒரு நல்ல உறவுக்கான படிகள் 35 00:03:46,810 --> 00:03:48,020 இல்லை, இது என்னுடையது. 36 00:03:54,902 --> 00:03:57,070 சரியாக இரண்டு மாதங்கள் கழித்து 37 00:03:57,154 --> 00:04:00,991 சேக்ரட் ஹார்ட் லவ் டிரெயில் என்றால் என்ன? 38 00:04:01,074 --> 00:04:04,328 ஆறு ஆண்டுகளுக்கு முன்பு ஜோயனாவும் நானும் 39 00:04:04,411 --> 00:04:06,955 இந்த இடத்தை சுற்றி பார்த்து மிகவும் ஏமாற்றமடைந்தோம். 40 00:04:07,039 --> 00:04:09,708 இந்த உறவுகள் அனைத்தும் அழிந்து வருகின்றன. 41 00:04:09,791 --> 00:04:12,211 இந்த உலகத்தில் துயரம் இருக்கிறது. 42 00:04:12,294 --> 00:04:14,463 எனவே மார்வும் நானும் இந்த ஜோடிகள் 43 00:04:14,546 --> 00:04:18,466 மற்றவர்களிடமிருந்து விலகி தங்களுக்குள் மீண்டும் இணைய ஒரு வழியை உருவாக்கினோம். 44 00:04:18,550 --> 00:04:22,513 நீங்கள் செல்வதற்கு முன், நாங்கள் வழங்கிய இரண்டு விஷயங்கள் இருக்கின்றன. 45 00:04:22,596 --> 00:04:23,722 உங்கள் காதல் பைகளில். 46 00:04:23,805 --> 00:04:26,433 மிக முக்கியமானது 47 00:04:26,517 --> 00:04:30,145 புனித சிப்பெவா கல்லில் உங்கள் பெயர் பொறிக்கப்பட்ட ஒரு இதயம். 48 00:04:30,229 --> 00:04:33,106 இதை ஒவ்வொரு நாளும் உங்கள் துணையிடம் கொடுத்து உங்கள் இதயத்தை 49 00:04:33,190 --> 00:04:35,108 இன்னொருவருக்கு எதற்கு கொடுக்கிறோம் என்ற அர்த்தத்தை... 50 00:04:35,192 --> 00:04:36,276 ஜோஷ் - மெலிசா 51 00:04:36,360 --> 00:04:37,945 -...சிந்திக்க சொல்லி கேட்போம். -இவற்றை பிடித்திருக்கிறது. 52 00:04:38,028 --> 00:04:41,698 சுற்றிப்பார்க்க தயங்காதீர்கள், ஆனால் வெகு தொலைவு போக வேண்டாம். 53 00:04:41,782 --> 00:04:44,034 இந்த காட்டில் மொபைல் சேவை கிடையாது, 54 00:04:44,117 --> 00:04:46,537 யாரும் இங்கே இறப்பதை நாங்கள் விரும்பவில்லை. 55 00:04:46,620 --> 00:04:47,704 சரி. 56 00:04:47,788 --> 00:04:51,708 நிஜமாகத்தான், கடந்த முறை சிலர் இறந்துவிட்டனர். 57 00:04:51,792 --> 00:04:54,169 முக்கியமாக, ஒருவருக்கொருவர் உங்கள் அன்பை வளர்ப்பதற்கான 58 00:04:54,253 --> 00:04:56,213 ஒரு வழியாக இந்த பயணத்தை பயன்படுத்தத் தவறாதீர்கள். 59 00:04:56,296 --> 00:04:58,090 மேகங்களைப் பற்றி கவலை வேண்டாம். 60 00:04:58,173 --> 00:05:00,008 விரைவில் வானம் தெளிவாகிவிடும், வாரத்தின் 61 00:05:00,092 --> 00:05:02,386 எஞ்சிய நாட்களில் வெயிலடிக்கும் என்றார் வானிலை அறிவிப்பாளர். 62 00:05:04,179 --> 00:05:05,556 -மெல்! -என்னை தனியாக விடு! 63 00:05:05,639 --> 00:05:07,683 மலையேற வேண்டாம் என்றுதானே சொன்னேன். 64 00:05:07,766 --> 00:05:10,561 நான் தவறாக எதுவும் சொல்லவில்லை. மலையேற்றத்தைத்தான் சொன்னேன்! 65 00:05:10,644 --> 00:05:13,146 நாம் பல மணி நேரமாக அலைகிறோம், 66 00:05:13,230 --> 00:05:15,482 நம் கைபேசிகள் வேலை செய்யவில்லை, ஈரமாகவும் சோர்வாகவும் இருக்கிறோம், 67 00:05:15,566 --> 00:05:17,693 ஏதோ காரணத்தால் நீ என் மீது கோபமாக இருக்கிறாய். 68 00:05:17,776 --> 00:05:19,570 -"ஏதோ காரணத்திற்காகவா"? -சரி. 69 00:05:19,653 --> 00:05:21,238 நீ என் இதயத்தை தொலைத்துவிட்டாய். 70 00:05:21,321 --> 00:05:23,198 என் இதயத்தை உனக்கு தந்தேன், நீ அதை தொலைத்துவிட்டாய். 71 00:05:23,282 --> 00:05:24,950 மெல், அது வெறும் கல்தான். 72 00:05:25,033 --> 00:05:26,243 அது ஒரு அடையாளம். 73 00:05:26,326 --> 00:05:28,954 நான் அதை உன்னிடம் கொடுத்ததில் ஒரு அர்த்தம் இருக்கிறது. 74 00:05:29,037 --> 00:05:30,664 அதை உன்னிடம் திருப்பித் தரவில்லை என்று நன்றாக தெரியுமா? 75 00:05:30,747 --> 00:05:32,833 உன் பையில் பார், ஏனென்றால் நான் சொல்கிறேன், நான்... 76 00:05:32,916 --> 00:05:35,252 பிறகு உன் இதயத்தை நான் ஏன் வைத்திருக்கிறேன்? 77 00:05:36,545 --> 00:05:39,339 சரி, அதனால் என்ன... நான் சென்று அதைத் தேட வேண்டுமா? 78 00:05:39,423 --> 00:05:42,092 சரி, நான் செய்கிறேன். தெளிவில்லாத இதய வடிவிலான அந்த கல்லுக்காக 79 00:05:42,176 --> 00:05:45,470 இந்த முழு காட்டையும் நான் தேடுகிறேன். அதுதானே உனக்கு வேண்டும்? 80 00:05:45,554 --> 00:05:46,722 ஆம். 81 00:05:47,931 --> 00:05:49,474 செல்லம், அது வெறும் கல். 82 00:05:49,558 --> 00:05:52,603 நீ எந்த முயற்சியும் செய்யாவிட்டால் இதைச் செய்வதில் என்ன பயன்? 83 00:05:52,686 --> 00:05:54,980 இதனால் என்ன பயனென்று எனக்குத் தெரியவில்லை. 84 00:05:55,063 --> 00:05:56,982 நம் உறவை வலுப்படுத்த உனக்கு விருப்பமில்லையா? 85 00:05:57,065 --> 00:05:59,443 நம் உறவு நன்றாகத்தான் இருக்கிறது. 86 00:05:59,526 --> 00:06:02,321 நன்றாக... இருக்கிறது. 87 00:06:02,404 --> 00:06:04,156 எல்லாம் ஏன் மிகச்சரியாக இருக்க வேண்டும்? 88 00:06:04,239 --> 00:06:05,824 அது ஏன் போதுமானதாக இருக்க முடியாது? 89 00:06:05,908 --> 00:06:08,118 சரி. எதுவும் தவறில்லை என்று பாசாங்கு செய், சரியா? 90 00:06:08,202 --> 00:06:09,828 ஏனென்றால் அது எளிதானது. 91 00:06:09,912 --> 00:06:11,371 இது சோர்வடைய செய்கிறது. 92 00:06:13,373 --> 00:06:15,250 பொறு. என்ன அது? 93 00:06:15,334 --> 00:06:17,294 -தேவாலய மணிகளா? -உனக்கும் அது கேட்கிறதா? 94 00:06:18,128 --> 00:06:20,756 சில நேரங்களில் வேறு யாருக்கும் கேட்காத தேவாலய மணிகள் உனக்கு கேட்குமா? 95 00:06:27,012 --> 00:06:29,473 அந்த பாலத்தை தாண்டி ஒரு ஊர் இருக்க வேண்டும். 96 00:06:30,849 --> 00:06:31,934 உனக்கு பாலமும் தெரிகிறதா? 97 00:06:32,601 --> 00:06:33,977 ம், நாம் இன்னும் தொடர வேண்டுமா? 98 00:07:00,546 --> 00:07:01,797 வினோதமாக இருக்கிறது. 99 00:07:02,840 --> 00:07:04,299 மழை நின்றுவிட்டது. 100 00:07:05,425 --> 00:07:06,718 "ஷ்மிகடூன்"? 101 00:07:06,802 --> 00:07:08,303 அமைதி மற்றும் மகிழ்ச்சிக்காக நாங்கள் எப்போதும் பாடுபடுவோம் 102 00:07:08,387 --> 00:07:10,347 அவர்களிடம் கழிப்பறை இருந்தால், உள்ளே செல்வேன். 103 00:07:10,430 --> 00:07:12,558 போலியான செடிகள் இங்கே எதற்கு? 104 00:07:12,641 --> 00:07:14,601 ஒருவேளை அவர்கள் தண்ணீரை சேமிக்கலாம். 105 00:07:20,566 --> 00:07:22,317 சரி... 106 00:07:22,401 --> 00:07:23,569 என்ன இது? 107 00:07:26,572 --> 00:07:30,242 ஏன் இசை எல்லா திசைகளிலிருந்தும் வருகிறது? 108 00:07:30,325 --> 00:07:33,036 எங்கள் சிறிய நகரத்துக்கு வரவேற்கிறோம் 109 00:07:33,120 --> 00:07:35,330 இங்கே நீங்கள் நண்பர்களை சந்திக்கலாம் 110 00:07:36,540 --> 00:07:38,792 நீங்கள் ஒருபோதும் சிடுசிடுப்பை காண மாட்டீர்கள் 111 00:07:38,876 --> 00:07:40,210 எல்லோருக்கும் வணக்கம். 112 00:07:40,294 --> 00:07:42,296 ஹேய், பீட். 113 00:07:42,379 --> 00:07:48,844 நாங்கள் அழைப்பதை கண்டு நீங்கள் வியப்பீர்கள் என்று நம்புகிறோம் 114 00:07:48,927 --> 00:07:55,934 இது அனைத்திலும் மிக அழகான, அற்புதமான மாயாஜால இடம் 115 00:07:57,686 --> 00:07:59,271 என்ன நடக்கிறது? 116 00:07:59,354 --> 00:08:02,816 இதை சுற்றுலாப் பயணிகளுக்காகச் செய்யலாம். கலோனியல் வில்லியம்ஸ்பர்க்கைப் போல. 117 00:08:06,445 --> 00:08:09,698 ஷ்மிகடூன் 118 00:08:09,781 --> 00:08:12,993 ஜூலை முதல் ஜூன் வரை இங்கே சூரியன் பிரகாசமாக இருக்கும் 119 00:08:13,076 --> 00:08:16,413 அதோடு இனிப்பைப் போல காற்று இனிமையாக வீசும் 120 00:08:16,496 --> 00:08:20,083 ஷ்மிகடூன் 121 00:08:21,001 --> 00:08:23,795 சரி, டிக்கெட் வாங்கவில்லை. நாங்கள் டிக்கெட் வைத்திருப்பவர்கள் அல்ல. 122 00:08:23,879 --> 00:08:25,214 நிறுத்து. அவர்கள் பாடட்டும். 123 00:08:25,297 --> 00:08:28,717 ஷ்மிகடூன் 124 00:08:28,800 --> 00:08:32,179 இங்கே கதகதப்பாகவும், புதிய கூட்டைப்போல பாதுகாப்பாகவும் இருக்கும் 125 00:08:32,261 --> 00:08:35,390 எங்கள் இதயங்கள் அனைத்தும் சந்தோஷத்தால் ஒளிரும் 126 00:08:35,474 --> 00:08:38,018 ஷ்மிகடூன் 127 00:08:38,101 --> 00:08:39,102 ஷ்மிகடூன் 128 00:08:39,186 --> 00:08:42,606 இங்கே ஆண்கள் ஆண்களாகவும் பசுக்கள் பசுக்களாகவும் இருப்பார்கள் 129 00:08:42,688 --> 00:08:46,068 விவசாயிகள் தங்கள் கலப்பையால் உழும்போது சிரிப்பார்கள் 130 00:08:46,151 --> 00:08:50,531 மரங்கள் உயரமாக இருக்கும் அதை ஷ்மிகடூன் என்றழைக்கிறோம் 131 00:08:51,114 --> 00:08:52,741 இது வசீகரமாக இருக்கிறது. 132 00:08:52,824 --> 00:08:55,035 வசீகரமா? இது விக்கர் மேன். 133 00:08:56,119 --> 00:09:00,165 எங்கள் பள்ளி ஆசிரியை எம்மா டேட் குழந்தைகள் படிக்க உதவுகிறார் 134 00:09:00,249 --> 00:09:02,793 28 வயதிலும் திருமணமாகாதவர் 135 00:09:02,876 --> 00:09:04,336 ஷ்மிகடூனில் 136 00:09:04,419 --> 00:09:08,674 மெக்டொனஃப் மகனுக்காக ஏங்கினார், ஆனால் மகள்கள் பிறந்தனர் 137 00:09:08,757 --> 00:09:10,926 அவர்களைத் தொட்டால், என் துப்பாக்கிக்கு பதில் சொல்ல நேரிடும் 138 00:09:11,009 --> 00:09:12,719 ஷ்மிகடூனில் 139 00:09:12,803 --> 00:09:14,680 -அட! -மன்னித்துவிடு, பீட்! 140 00:09:14,763 --> 00:09:16,974 லாரி பீன் எங்கள் தீயணைப்பு வீரர் 141 00:09:17,057 --> 00:09:19,017 ஹெலன் பிரிட் பாடற்குழுவை வழிநடத்துபவர் 142 00:09:19,101 --> 00:09:21,144 நோய்களைக் குணப்படுத்த டாக்டர் இங்கே இருக்கிறார் 143 00:09:21,228 --> 00:09:23,188 அவர் தோல்வியுற்றால் நான் இருக்கிறேன் 144 00:09:23,272 --> 00:09:25,357 அவர் தோல்வியுற்றால் இவர் இருக்கிறார் 145 00:09:25,440 --> 00:09:27,568 பீட் நலமா? 146 00:09:27,651 --> 00:09:29,361 ஹென்றி பிரவுன் ஐஸை கொண்டுவருவார் 147 00:09:29,444 --> 00:09:31,238 மேடம் வினா ஆலோசனை வழங்குவார் 148 00:09:31,321 --> 00:09:33,365 அந்த குடிசையில் புஃபோர்ட் ரிக்ஸ் இருக்கிறார் 149 00:09:33,448 --> 00:09:35,742 நான் சொல்ல முடியாத விஷயங்களை பன்றிகளுக்கு செய்கிறேன் 150 00:09:35,826 --> 00:09:37,578 அவர் சொல்ல முடியாத விஷயங்களை பன்றிகளுக்கு செய்கிறார் 151 00:09:38,620 --> 00:09:40,080 மேயர் பேசுகிறார்! 152 00:09:40,622 --> 00:09:41,957 இது ஒருபோதும் முடியப்போவதில்லை. 153 00:09:42,666 --> 00:09:44,084 மேயர் பேசுகிறார். 154 00:09:44,168 --> 00:09:46,545 ஷ்மிகடூனின் மேயராக 155 00:09:47,546 --> 00:09:50,841 நான் இதை வலியுறுத்த நினைக்கிறேன் 156 00:09:50,924 --> 00:09:52,801 எங்கள் குறிக்கோள் 157 00:09:52,885 --> 00:09:56,972 "நாங்கள் எப்போதும் அமைதிக்காகவும் மகிழ்ச்சிக்காகவும் பாடுபடுவோம்" 158 00:09:57,556 --> 00:09:59,558 எங்கள் குறிக்கோள் 159 00:09:59,641 --> 00:10:05,856 "நாங்கள் எப்போதும் அமைதிக்காகவும் மகிழ்ச்சிக்காகவும் பாடுபடுவோம்" 160 00:10:05,939 --> 00:10:06,940 ஆனால்... 161 00:10:07,024 --> 00:10:08,901 அது திருமதி. லேட்டன். 162 00:10:08,984 --> 00:10:12,696 ஷ்மிகடூன் நீடித்திருக்க 163 00:10:12,779 --> 00:10:16,158 அதை பழமையானதாகவும் களங்கமற்றதாகவும் வைத்திருக்க வேண்டும் 164 00:10:16,241 --> 00:10:19,870 எங்கள் முன்னோர்கள் வாழ்ந்த இந்த நிலத்தில் 165 00:10:19,953 --> 00:10:24,791 கடவுளின் சட்டங்களுக்கு எப்போதும் கீழ்ப்படிய வேண்டும் 166 00:10:26,710 --> 00:10:27,836 எல்லோரும்! 167 00:10:30,464 --> 00:10:33,634 ஷ்மிகடூன்! 168 00:10:33,717 --> 00:10:37,513 ஒவ்வொரு நாளும் நண்பகலில் தேவாலய மணிகள் ஒலிக்கும் 169 00:10:37,596 --> 00:10:40,474 என் புதிய குத்தீட்டியை வெல்ஸ் ஃபார்கோ வண்டி கொண்டு வந்தது 170 00:10:40,557 --> 00:10:42,392 ஷ்மிகடூன் 171 00:10:42,476 --> 00:10:44,394 -அட! -மன்னித்துவிடு, பீட். 172 00:10:44,478 --> 00:10:47,523 இங்கே ஒரு ஆணாக மிகப்பெரிய மற்றும் பரந்த கனவுகளை காண முடியும் 173 00:10:47,606 --> 00:10:51,068 மேலும் ஒரு பெண் அவனது அருகிலேயே இருக்க முடியும் 174 00:10:51,151 --> 00:10:54,571 பெரியதோ சிறியதோ எல்லோருக்கும் நம்பிக்கை இருக்கிறது 175 00:10:54,655 --> 00:10:58,158 பயனற்றதென்று எதுவுமில்லை உங்கள் குடையை கொண்டு வாருங்கள் 176 00:10:58,242 --> 00:11:02,162 இதை நாங்கள் இப்படி அழைக்கிறோம் 177 00:11:02,246 --> 00:11:05,290 ஷ்மிகா 178 00:11:05,374 --> 00:11:08,919 ஷமிகா, ஷ்மிகா ஷ்மிகா, ஷ்மிகா 179 00:11:09,002 --> 00:11:15,551 ஷ்-மி-க-டூ-ஊ! 180 00:11:16,301 --> 00:11:19,888 ஷ்மிகடூன்! 181 00:11:22,975 --> 00:11:25,811 ஆஹா! நன்றாக பாடினீர்கள்! 182 00:11:25,894 --> 00:11:27,688 -நாம் இப்போது போகலாமா? -போக வேண்டுமா? 183 00:11:27,771 --> 00:11:29,523 நான் இசையை வெறுப்பது உனக்குத் தெரியும். 184 00:11:29,606 --> 00:11:31,567 நிஜ வாழ்க்கையில் மக்கள் இப்படி பாட மாட்டார்கள். 185 00:11:31,650 --> 00:11:34,820 சரி, அழைத்ததும் திரும்ப வரும் மந்திர சுத்தியலை நம்புகிறாய். 186 00:11:34,903 --> 00:11:36,196 அது முற்றிலும் வேறொன்று. 187 00:11:36,280 --> 00:11:39,032 தோர் இடியின் கடவுள், நிச்சயமாக அவர் அழைத்தால் மோல்னிர் திரும்ப வரும். 188 00:11:39,116 --> 00:11:40,951 -வாருங்கள், நண்பர்களே. -ஓ, இல்லை. 189 00:11:41,034 --> 00:11:42,786 என்னை நடிகர்களுடன் பேச வைத்துவிடாதே. 190 00:11:42,870 --> 00:11:46,874 நான் வெறுப்பது உனக்குத் தெரியும்... ஹேய்! திரு. மேயர். 191 00:11:46,957 --> 00:11:49,209 ஷ்மிகடூனுக்கு வரவேற்கிறோம். 192 00:11:49,293 --> 00:11:51,962 உங்கள் சேவையில், மேயர் அலோசியஸ் மென்லவ். 193 00:11:52,045 --> 00:11:53,797 இது என் மனைவி, ஃபுளோரன்ஸ். 194 00:11:53,881 --> 00:11:55,299 இந்த பொத்தானை பிடியுங்கள். 195 00:11:55,382 --> 00:11:57,676 நான் மேயர் பதவிக்கு மீண்டும் போட்டியிடுகிறேன். 196 00:11:57,759 --> 00:11:59,678 பொத்தான்களை யாருக்குத்தான் பிடிக்காது? 197 00:12:01,346 --> 00:12:03,849 -நான் மெலிசா. இது ஜோஷ். -உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி. 198 00:12:03,932 --> 00:12:06,018 நீங்கள் நிச்சயமாக ஷ்மிகடூன் விடுதியில் தங்குவீர்கள். 199 00:12:06,101 --> 00:12:09,980 ம், உங்களுக்குப் பிடிக்கும். அலோசியஸும் நானும் தேனிலவுக்கு அங்கே தங்கினோம். 200 00:12:10,063 --> 00:12:12,232 அதற்கு பின்னால் நிறைய சேவல்கள் இருந்ததால் 201 00:12:12,316 --> 00:12:14,234 அந்த இரவு எங்களால் நன்றாக தூங்க முடியவில்லை. 202 00:12:14,943 --> 00:12:17,362 -சரி. -நாங்கள் கிளம்புகிறோம், எனவே... 203 00:12:17,446 --> 00:12:19,573 நாங்கள் பல நாட்களாக தரையில்தான் தூங்கினோம், 204 00:12:19,656 --> 00:12:22,201 எனவே நாங்கள் ஏன் படுக்கையை மறுக்கப் போகிறோம்? 205 00:12:22,284 --> 00:12:23,660 பிரச்சனை முடிந்தது. 206 00:12:24,244 --> 00:12:26,788 கார்சன். தங்கும் விடுதிக்குச் சென்று 207 00:12:26,872 --> 00:12:30,250 ஹார்வியிடம் இரண்டு பிரத்தியேகமான விருந்தினர்கள் தங்க இருப்பதாக சொல். 208 00:12:30,334 --> 00:12:31,877 சரி, திரு. மேயர். 209 00:12:34,046 --> 00:12:38,425 நீங்கள் இருவரும் வித்தியாசமான ஜோடியாக இருக்கிறீர்கள். 210 00:12:38,509 --> 00:12:40,344 திருமண மோதிரங்கள் இல்லை. 211 00:12:40,427 --> 00:12:42,721 -ஓ, இல்லை, திருமணம் ஆகவில்லை. -நிச்சயமாக இல்லை. 212 00:12:43,305 --> 00:12:44,640 -நிஜமாகவா? -என்ன? 213 00:12:44,723 --> 00:12:46,308 நான் மில்ட்ரெட் லேட்டன், 214 00:12:46,391 --> 00:12:48,977 இது என் கணவர், மத போதகர் லேட்டன். 215 00:12:49,061 --> 00:12:51,230 நேராக நில்லுங்கள், ஹோவர்ட், ஒரு நோக்கம் உள்ளது போல. 216 00:12:51,313 --> 00:12:53,106 நீங்கள் ஞாயிற்றுக்கிழமை வரை தங்கலாம். 217 00:12:53,190 --> 00:12:55,609 உங்களை சபையில் பார்க்க ஆசை, அது இன்னும் சிறப்பாக இருக்கும். 218 00:12:55,692 --> 00:12:58,695 அதற்கு முன்பே நாங்கள் சென்று விடுவோம் என்று நம்புகிறேன். 219 00:12:58,779 --> 00:13:01,615 -சரி, விடுதி எங்கே? -இந்த பக்கமாக. 220 00:13:03,158 --> 00:13:06,578 ஹேய். அன்பாக இரு. அவர்களை கோபப்படுத்தாதே. 221 00:13:06,662 --> 00:13:08,664 இது புதுமையாகத்தான் இருக்கிறது. 222 00:13:08,747 --> 00:13:10,207 நீ நடிகர்களை பார்த்தாய் தானே. 223 00:13:10,290 --> 00:13:11,542 இனபாகுபாடில்லாத நடிகர்கள். 224 00:13:11,625 --> 00:13:13,043 ஆம், ஆனால் போதகரின் மனைவிக்கு 225 00:13:13,126 --> 00:13:16,421 நாம் வெவ்வேறு இனத்தவராக இருப்பது பிடிக்கவில்லை எனத் தோன்றுகிறது. 226 00:13:16,505 --> 00:13:17,965 நீ என்ன சொல்கிறாய், பெண்ணே? 227 00:13:18,048 --> 00:13:19,508 வாழ்க்கையில் சிலிர்ப்பு வேண்டுமா? 228 00:13:21,009 --> 00:13:22,177 முதல் சவாரி என்னுடையது. 229 00:13:23,095 --> 00:13:25,514 நீ கொஞ்சம் தள்ளியே இரு, டேனி பெய்லி. 230 00:13:25,597 --> 00:13:28,392 உன்னைப் போன்றவர்கள் இல்லையென்றால் இந்த ஊர் இன்னும் கண்ணியமாக இருக்கும். 231 00:13:28,475 --> 00:13:30,227 திருமதி. லேட்டன், அதை நிஜமாக சொல்லவில்லைதானே. 232 00:13:30,310 --> 00:13:31,478 ம், ஆம், நிஜமாக சொல்கிறேன். 233 00:13:31,562 --> 00:13:34,022 நீ ஒரு அயோக்கியன், ஒரு போக்கிரி, 234 00:13:34,106 --> 00:13:36,316 நான் பேசுவதை பொறுத்துக்கொள், எதற்கும் பயனில்லாதவனே. 235 00:13:36,400 --> 00:13:38,026 செல்லுங்கள், விடுதி அங்கே இருக்கிறது. 236 00:13:38,110 --> 00:13:41,029 இந்த பிரயோசனமில்லாதவனிடம் உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள். 237 00:13:41,655 --> 00:13:44,658 இந்த ஊரின் போக்கிரிக்கு உன் மேல் விருப்பம் போல தெரிகிறது. 238 00:13:44,741 --> 00:13:47,953 -நான் அவனை அடிக்கப் போகிறேன். -ஓ, அதைப் பார்க்க எனக்கும் ஆசைதான். 239 00:13:49,413 --> 00:13:51,707 காதலின் சுரங்கம் - வலதுபுறம் செல்லுங்கள்! 240 00:13:51,790 --> 00:13:53,709 ஷ்மிகடூன் விடுதி 241 00:13:58,255 --> 00:13:59,548 காக்க வைத்ததற்கு மன்னிக்கவும். 242 00:13:59,631 --> 00:14:02,009 நீங்கள்தான் எல்லோரும் பேசும் விருந்தினராக இருக்க வேண்டும். 243 00:14:02,092 --> 00:14:04,511 -நீங்கள் ஒரு அறையைத் தேடுகிறீர்கள். -இரண்டு அறைகள். 244 00:14:06,054 --> 00:14:07,347 அவர்களுக்கு திருமணமாகவில்லை, ஹார்வி. 245 00:14:07,431 --> 00:14:10,851 இதுபோன்ற விஷயங்கள் தொடர்பான ஊர் விதிகளை நன்கு அறிவாய் என்று நம்புகிறேன். 246 00:14:10,934 --> 00:14:13,896 ஆம். ஆம், நிச்சயமாக, திருமதி. லேட்டன். 247 00:14:13,979 --> 00:14:15,189 இரண்டு அறைகள். 248 00:14:16,231 --> 00:14:18,108 சரி, புரிகிறது. 249 00:14:18,192 --> 00:14:21,278 நீங்கள் போதகரின் மனைவி, நாங்கள் பாவப்பட்டவர்கள். 250 00:14:21,361 --> 00:14:23,197 "ஓ, நாங்கள் நரகத்திற்கு போவோம்!" என்கிறீர்கள். 251 00:14:24,364 --> 00:14:26,033 ஒரு அறை போதும். 252 00:14:28,952 --> 00:14:31,872 மன்னிக்கவும், சார். ஊரின் விதிகள் பின்பற்றப்பட வேண்டும். 253 00:14:31,955 --> 00:14:35,000 சரி, கேள், விடுதி காப்பாளர் ஹார்வியே. 254 00:14:35,083 --> 00:14:37,044 நான் சோர்வாக இருக்கிறேன், அதோடு உன் கதைகளைக் 255 00:14:37,127 --> 00:14:39,004 -கேட்க தயாராக இல்லை... -ஜோஷ், பேசுவதை நிறுத்து. 256 00:14:39,087 --> 00:14:40,839 ஒரு இரவுதானே. இரண்டு அறைகளை எடுத்துக்கொள்வோம். 257 00:14:40,923 --> 00:14:43,133 அற்புதம். கட்டணம் ஒரு டாலர். 258 00:14:44,218 --> 00:14:45,427 நல்லது. ஆம். 259 00:14:47,387 --> 00:14:48,388 சரி. 260 00:14:50,140 --> 00:14:52,809 இரண்டு அறைகளுக்கும் ஒரு டாலர் இதோ. 261 00:14:52,893 --> 00:14:54,394 நன்றி. 262 00:14:54,478 --> 00:14:56,188 இது அபத்தமானது. 263 00:14:56,271 --> 00:15:00,150 தெளிவு பெற கேட்கிறேன், இரண்டு அறைகளுக்கும் சேர்த்து ஒரு டாலர் என்பதால் கோபமா? 264 00:15:00,234 --> 00:15:01,735 இல்லை, நான்... 265 00:15:01,818 --> 00:15:05,822 நாம் பழைய காலத்தில் இருப்பதுபோல பாசாங்கு செய்ய நான் விரும்பவில்லை. 266 00:15:05,906 --> 00:15:09,243 சரி, இதை எப்படி உணர வேண்டும் என்று நான் உனக்கு சொல்ல விரும்பவில்லை, 267 00:15:09,326 --> 00:15:10,994 ஆனால் உன்னால் வித்தியாசமாக உணர முடியுமா? 268 00:15:11,620 --> 00:15:14,122 என் காதலியுடன் யான்கீஸ் போட்டியின் ஸ்கோரைப் 269 00:15:14,206 --> 00:15:17,084 பார்க்கவும் எனது மின்னஞ்சலைப் படிக்கவும் வைஃபை வசதி கொண்ட 270 00:15:17,167 --> 00:15:18,168 ஒரு அறை எனக்கு வேண்டும். 271 00:15:18,252 --> 00:15:21,046 மன்னியுங்கள். தபால் வண்டி அடுத்த வாரம்தான் வரும். 272 00:15:21,129 --> 00:15:22,756 -உன்னை வெறுக்கிறேன். -சரி. 273 00:15:26,301 --> 00:15:27,970 நீங்கள் மிகவும் நல்லவர்கள். 274 00:15:32,558 --> 00:15:36,228 சரி, ஒத்துக்கொள்கிறேன், இந்த இடம் கொஞ்சம் வினோதமானதுதான். 275 00:15:36,311 --> 00:15:40,190 நன்றி. நாம் ஒன்றாக விஷயங்களை வெறுக்கிறோம் என்பது முக்கியமானது. 276 00:15:40,274 --> 00:15:42,359 தெரியும், செல்லம். எனக்கும்தான். 277 00:15:42,442 --> 00:15:44,361 நான் கோபப்பட்டதற்கு மன்னித்துவிடு. 278 00:15:44,444 --> 00:15:46,905 இவர்கள் எல்லோரும் இறக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன். அது தவறா? 279 00:15:46,989 --> 00:15:47,990 சரி விடு. 280 00:15:49,241 --> 00:15:51,785 ஹேய். நான் என்ன செய்ய விரும்புகிறேன் தெரியுமா? 281 00:15:51,869 --> 00:15:57,332 நீண்ட, சூடான குளியலுக்கு பிறகு காதலின் சுரங்கத்துக்கு செல்கிறேன். 282 00:15:57,416 --> 00:15:59,835 -நிஜமாகவா? -அது உணர்வுபூர்வமானதாக இருக்கலாம், 283 00:15:59,918 --> 00:16:01,795 ஆனால் செய்ய வேறு என்ன அங்கே இருக்கிறது, சரிதானே? 284 00:16:01,879 --> 00:16:03,380 அது காதல் சம்மந்தமாக இருக்கலாம். 285 00:16:04,506 --> 00:16:07,092 புரிகிறது. உன்னை 7 மணிக்கு அழைத்துச் செல்கிறேன். 286 00:16:07,176 --> 00:16:08,802 நான் காத்திருப்பேன். 287 00:16:08,886 --> 00:16:13,348 அதோடு ஹேய், நமக்கு இரண்டு அறைகள் இருப்பதால் 288 00:16:13,432 --> 00:16:15,851 இரண்டு அறைகளையும் பயன்படுத்த வேண்டும் என்று அர்த்தமல்ல. 289 00:16:16,977 --> 00:16:19,271 -என்ன நினைக்கிறேனென்று புரிகிறதா? -ம். 290 00:16:28,197 --> 00:16:29,406 இந்த இடத்தை வெறுக்கிறேன். 291 00:16:29,489 --> 00:16:31,325 -உன்னை 7 மணிக்கு பார்க்கிறேன். -ஆர்வத்துடன் இருக்கிறேன். 292 00:16:49,676 --> 00:16:50,761 ஜோஷ்? 293 00:16:52,930 --> 00:16:53,972 ஜோஷ். 294 00:17:15,493 --> 00:17:17,538 காதலின் சுரங்கம் 295 00:17:22,416 --> 00:17:23,585 மாலை வணக்கம், பெண்ணே. 296 00:17:24,336 --> 00:17:27,005 மாலை வணக்கம். 297 00:17:27,089 --> 00:17:29,466 நாம் முறையாக அறிமுகப்படுத்தப்படவில்லை. 298 00:17:29,550 --> 00:17:31,093 என் பெயர் டானி. 299 00:17:32,094 --> 00:17:35,264 -டானி பெய்லி. -ஆம், போக்கிரி. 300 00:17:35,347 --> 00:17:36,765 நான் மெலிசா. கிம்பிள். 301 00:17:40,185 --> 00:17:42,312 இரவில் இந்த இடம் அழகாக இருக்கிறது. 302 00:17:42,396 --> 00:17:43,814 அது தனியாக இல்லை. 303 00:17:45,065 --> 00:17:46,358 சலுகை இன்னும் இருக்கிறது. 304 00:17:46,441 --> 00:17:48,902 முதல் சவாரி என்னுடையது. இரண்டாவதும் தான். 305 00:17:49,486 --> 00:17:52,447 ஓ, இல்லை, நான் சுற்றிப் பார்க்கவே இங்கே வந்தேன். 306 00:17:52,531 --> 00:17:53,740 நீ வேடிக்கையான பெண். 307 00:17:54,867 --> 00:17:57,160 ஆஹா, மலர்களை பார். 308 00:17:57,244 --> 00:17:58,871 ஆண்டின் இந்த நேரத்தில் இப்படி நிறைய நடக்கும். 309 00:17:59,663 --> 00:18:02,541 காற்று வீசும் போதெல்லாம். 310 00:18:02,624 --> 00:18:05,002 உனக்கு காதலன் இருக்கிறானா? 311 00:18:05,085 --> 00:18:07,379 ஆம், இருக்கிறான். 312 00:18:07,462 --> 00:18:11,842 நீ இரவில் தனியாக வெளியே வருவதை, ஒரு அந்நியருடன் பேசுவதை ஏற்பானா? 313 00:18:12,509 --> 00:18:14,219 அது... அவன்... 314 00:18:15,554 --> 00:18:17,306 கேள்வியை மீண்டும் சொல்? 315 00:18:17,389 --> 00:18:19,600 பொறு. நீ என்ன செய்ய முயற்சிக்கிறாய்? 316 00:18:19,683 --> 00:18:21,226 நீ என்னை மயக்க பார்க்கிறாயா? 317 00:18:21,810 --> 00:18:23,103 என்ன? இல்லை. 318 00:18:23,187 --> 00:18:26,023 பிறகு ஏன் அந்த வினோதமான எண்ணங்கள் என் தலையில் இருந்து கொண்டே இருக்கின்றன? 319 00:18:26,815 --> 00:18:28,901 -எனக்கு நிஜமாக... -உன்னால் மறக்க முடியும். 320 00:18:28,984 --> 00:18:32,571 ஏனென்றால் டானி பெய்லி எந்தப் பெண்ணுடனும் உறவு ஏற்படுத்திக்கொள்ள மாட்டான். 321 00:18:32,654 --> 00:18:33,655 நிச்சயமாக. 322 00:18:33,739 --> 00:18:40,162 ஒரு அணிலுக்கு மற்றொரு அணில் வேண்டும் என்றால் அது இணைய கவலைப்படுவதில்லை 323 00:18:40,245 --> 00:18:41,371 எனக்காக நிகழ்ச்சி நடக்கிறது. 324 00:18:42,998 --> 00:18:46,668 ராபின் பறவை எதிர்காலத்தைப் பற்றி யோசிப்பதில்லை 325 00:18:46,752 --> 00:18:50,672 அதற்கு ஒரு தேவை ஏற்பட்டாலொழிய 326 00:18:50,756 --> 00:18:52,257 நன்றாக பாடுகிறாய். 327 00:18:52,341 --> 00:18:56,845 நான் காட்டில் இருக்கும் விலங்கு போன்றவன் 328 00:18:56,929 --> 00:19:02,100 எனவே நீ சமாதானம் அடைய வேண்டிய ஒரு உண்மை ஒன்று இருக்கிறது 329 00:19:02,184 --> 00:19:03,852 சிறந்த முகவர் தேவை. 330 00:19:07,481 --> 00:19:14,279 நீ என்னைக் கட்டுப்படுத்த முடியாது இவன் சுதந்திரமாக இருக்க பிறந்தவன் 331 00:19:14,363 --> 00:19:21,203 எல் பாசோவில் பெண்ணொருத்தி என்னைப் பார்த்து சிரித்து கால்நடைகளை துரத்தினாள் 332 00:19:21,286 --> 00:19:27,292 அப்போதுதான் நான் வேகமெடுத்தேன் ஓ, நீ என்னைக் கட்டுப்படுத்த முடியாது 333 00:19:34,174 --> 00:19:40,848 நீ என்னைக் கட்டுப்படுத்த முடியாது நான் கடலில் உள்ள காற்று போன்றவன் 334 00:19:40,931 --> 00:19:44,518 அன்னபெல்லா என்ற இசை ஆசிரியை 335 00:19:44,601 --> 00:19:47,980 என்னை அவளது காதலனாக மாற்ற முயற்சித்தாள் 336 00:19:48,063 --> 00:19:53,861 ஆனால் நான் தனியாக வாழ தேர்வு செய்தேன் நீ என்னை கட்டுப்படுத்த முடியாது 337 00:19:53,944 --> 00:19:56,822 இது உண்மை 338 00:19:58,073 --> 00:20:01,952 ஆனால் ஒருவேளை அது முடியும் என்றால் 339 00:20:02,035 --> 00:20:09,042 உன்னைப் போன்ற ஒருவளால் தான் அது முடியும் 340 00:20:20,053 --> 00:20:21,889 நான் ஆடமாட்டேன். நான் ஆடி ஒரு வருடம் ஆகிறது... 341 00:20:22,848 --> 00:20:24,808 நம் உடல்களை பேச வைப்போம். 342 00:20:24,892 --> 00:20:27,728 நம் வாய்களும் உடலின் ஒரு பகுதியாகத்தானே இருக்கின்றன... 343 00:20:44,286 --> 00:20:47,789 எப்படியோ என்னால் பார்க்க முடிகிறது 344 00:20:48,332 --> 00:20:55,088 அது எப்படி இருக்குமோ அப்படி 345 00:20:58,133 --> 00:21:01,470 கூர்மையான வெள்ளை வேலி கொண்ட வசதியான சிறிய குடிசையில் 346 00:21:01,553 --> 00:21:04,640 எப்போதும் சரிசெய்ய வேண்டிய டிராக்டர் இருக்கிறது 347 00:21:06,183 --> 00:21:09,436 அதோடு பெருமையோடு சிரிக்கும் அழகான மணமகள் இருக்கிறாள் 348 00:21:09,520 --> 00:21:12,856 எல்லை கோட்டின் இந்த பக்கத்தில் 349 00:21:12,940 --> 00:21:16,902 நாம் ஒன்று, இரண்டு அல்லது மூன்று குழந்தைகளை பெற்றுக்கொள்வோம் 350 00:21:16,985 --> 00:21:22,074 உனக்கு இரண்டு பெண்பிள்ளைகள் எனக்கு இரண்டு ஆண்பிள்ளைகள் 351 00:21:22,157 --> 00:21:24,284 எல்லா குழந்தைகளும் நம் இருவருக்குமானவர்கள்தானே? 352 00:21:24,868 --> 00:21:28,705 அதோடு நாம் இருவரும் ஒருவரையொருவர் காதலிப்போம் 353 00:21:28,789 --> 00:21:33,836 நாம் இறந்து பிரியும் நாள் வரை 354 00:21:35,379 --> 00:21:37,047 ஆனால் அது ஒருபோதும் நடக்காது. 355 00:21:37,130 --> 00:21:40,342 காரணம், நீ என்னை கட்டுப்படுத்த முடியாது 356 00:21:40,425 --> 00:21:47,057 என்னை 357 00:21:48,809 --> 00:21:50,978 அருமை. சிறப்பு. 358 00:21:51,061 --> 00:21:53,480 அது மிகவும் அழகான பாடல். 359 00:21:54,273 --> 00:21:55,274 என்ன பாடல்? 360 00:21:55,941 --> 00:21:58,277 நீ என்னிடம் பாடிக்கொண்டிருந்தது. 361 00:21:58,360 --> 00:21:59,778 பாடினேனா? 362 00:21:59,862 --> 00:22:01,280 சரி. 363 00:22:02,155 --> 00:22:04,950 தாமதமாகிவிட்டது. நான் சோர்வாக இருக்கிறேன். 364 00:22:05,033 --> 00:22:06,660 இது வினோதமாக இருக்கிறது. 365 00:22:06,743 --> 00:22:10,372 நன்றி மற்றும் இரவு வணக்கம். 366 00:22:18,922 --> 00:22:20,257 நேற்றிரவு நடந்ததற்கு மன்னித்துவிடு. 367 00:22:21,508 --> 00:22:23,927 நான் வேண்டுமென்றே தூங்கவில்லை. 368 00:22:25,179 --> 00:22:26,388 ஆனால் உன்னை சந்தோஷப்படுத்த, 369 00:22:26,471 --> 00:22:29,975 இன்று நீ விரும்பும் வரை அந்த காதல் சுரங்க சவாரி செய்யலாம். 370 00:22:30,058 --> 00:22:32,561 சரி, பரவாயில்லை. எனக்கு மிகவும் பசிக்கிறது. 371 00:22:32,644 --> 00:22:34,062 ஆர்டர் செய்யலாமா? பணியாளரே! 372 00:22:36,231 --> 00:22:37,941 காலை வணக்கம். இன்று பொழுது எப்படி இருக்கிறது? 373 00:22:38,025 --> 00:22:39,151 நேற்றிரவு நன்றாக தூங்கினீர்களா? 374 00:22:39,234 --> 00:22:41,528 ஆம், பெட்ஸி. மரக்கட்டைப் போல தூங்கினேன். 375 00:22:44,114 --> 00:22:46,283 ஓ, கடவுளே, "மரக்கட்டைப் போலவா"? 376 00:22:46,366 --> 00:22:49,077 அது நகைச்சுவையானது, ஏனென்றால் மரக்கட்டைகள் தூங்காது. 377 00:22:49,161 --> 00:22:51,038 நீங்கள் வேடிக்கையானவர்! 378 00:22:51,121 --> 00:22:53,457 -நான் அவ்வளவு வேடிக்கையானவன் அல்ல. -உண்மையை தான் சொல்கிறான். 379 00:22:53,540 --> 00:22:55,334 -ஏதாவது ஆர்டர் செய்யலாமா? -நிச்சயமாக. 380 00:22:55,417 --> 00:22:59,421 நீங்கள் அதிர்ஷ்டசாலிகள், இன்று எங்கள் உலக புகழ்பெற்ற சோளப் புட்டு இருக்கிறது. 381 00:22:59,505 --> 00:23:01,673 சோளப் புட்டா? என்ன அது? 382 00:23:01,757 --> 00:23:02,966 என்ன? 383 00:23:03,842 --> 00:23:07,054 சோளப் புட்டை கேள்விப்பட்டதே இல்லை என்று சொல்கிறீர்களா? 384 00:23:07,137 --> 00:23:09,139 இவருக்கு சோளப் புட்டை தெரியாதாம்! 385 00:23:09,806 --> 00:23:13,602 ஓ, இல்லை. அது ஒரு பாடல். நீ இன்னொரு பாடலை தொடங்கிவைத்துவிட்டாய். 386 00:23:13,685 --> 00:23:15,771 சோளப் புட்டு சோளப் புட்டு 387 00:23:15,854 --> 00:23:18,357 சோளப் புட்டு, சோளப் புட்டு சோளப் புட்டு, சோளப் புட்டு 388 00:23:20,526 --> 00:23:21,902 நாங்கள் இங்கிருந்து விலக முடியுமா? 389 00:23:23,195 --> 00:23:25,322 என் காதலிக்கு சோளப் புட்டு பிடிக்கும் 390 00:23:25,405 --> 00:23:27,366 அவள் அதை தொடர்ந்து சாப்பிடுகிறாள் 391 00:23:27,449 --> 00:23:29,576 சில நேரங்களில் ஆச்சரியப்படுவேன் 392 00:23:29,660 --> 00:23:31,495 அவளுக்கு என்னை விட அதை அதிகம் பிடிக்குமா? 393 00:23:31,578 --> 00:23:34,540 அவளுக்கு என்னை விட புட்டை அதிகம் பிடிக்குமா? 394 00:23:35,791 --> 00:23:38,043 என் காதலனுக்கு சோளப் புட்டு பிடிக்கும் 395 00:23:38,126 --> 00:23:40,087 எனக்கு எப்படி செய்வதென்று தெரியும் 396 00:23:40,170 --> 00:23:42,422 அவர் என் புட்டை விரும்பினால் 397 00:23:42,506 --> 00:23:43,882 அவர் என்னை மணக்க வேண்டும் 398 00:23:43,966 --> 00:23:46,927 ஓ, அவர் என்னை மணக்க வேண்டும் 399 00:23:50,222 --> 00:23:52,683 புட்டில் சோளத்தை போடு புட்டை பாத்திரத்தில் போடு 400 00:23:52,766 --> 00:23:55,102 பாத்திரத்தில் உள்ளதை வயிற்றில் போடு, ஏனெனில் அது உனக்கு நல்லது 401 00:23:55,185 --> 00:23:57,646 புட்டில் சோளத்தை போடு புட்டை பாத்திரத்தில் போடு 402 00:23:57,729 --> 00:23:59,982 பாத்திரத்தில் உள்ளதை வயிற்றில் போடு, ஏனெனில் அது உனக்கு நல்லது 403 00:24:00,065 --> 00:24:02,234 சோளப் புட்டு யாருக்கு வேண்டும்? 404 00:24:02,317 --> 00:24:04,695 சோளப் புட்டு எங்களுக்கு வேண்டும் 405 00:24:04,778 --> 00:24:07,030 சோளப் புட்டு யாருக்கு வேண்டும்? 406 00:24:07,114 --> 00:24:09,408 சோளப் புட்டு எங்களுக்கு வேண்டும் 407 00:24:12,911 --> 00:24:15,706 -என்ன? -அவர்கள் நாமும் பாட விரும்புகிறார்கள். 408 00:24:15,789 --> 00:24:18,792 -நான் பாடமாட்டேன், நீயும் பாடாதே. -அட வேடிக்கையாக இருக்கும். 409 00:24:18,876 --> 00:24:20,878 இல்லை. வேண்டாம். 410 00:24:20,961 --> 00:24:22,546 சோளப் புட்டு சாப்பிட்டதில்லை 411 00:24:22,629 --> 00:24:23,630 ஏன்? 412 00:24:24,214 --> 00:24:26,758 இது வீணானதாக இருக்கலாம் 413 00:24:27,593 --> 00:24:29,636 உங்களிடம் கொஞ்சம் கூடுதலாக இருந்தால் 414 00:24:29,720 --> 00:24:30,637 "கூடுதலாகவா"? 415 00:24:30,721 --> 00:24:32,723 நான் அதை சுவைக்க விரும்புகிறேன் 416 00:24:32,806 --> 00:24:35,225 ஓ, அவள் நிச்சயமாக சுவைக்க வேண்டுமாம் 417 00:24:36,977 --> 00:24:41,523 சோளம், சோளம், சோளம், சோளம், சோளம் 418 00:24:41,607 --> 00:24:46,320 புட்டு! 419 00:24:48,614 --> 00:24:49,781 சுவைமிக்கது! 420 00:24:49,865 --> 00:24:50,866 சுவைமிக்கது! 421 00:24:51,825 --> 00:24:53,118 அது மிகவும் வினோதமாக இருந்தது. 422 00:24:53,202 --> 00:24:55,787 நான் பாட ஆரம்பித்ததும், என்ன சொல்ல வேண்டும் என்று தெரிந்துவிட்டது. 423 00:24:55,871 --> 00:24:57,789 அது அருமை. நாம் இப்போது போகலாமா? 424 00:24:57,873 --> 00:24:59,750 -என்ன? ஏன்? -நிஜமாக சொல்கிறாயா? 425 00:24:59,833 --> 00:25:02,753 நீயும் இந்த ஊர்காரர்களும் கடந்த ஐந்து நிமிடங்களாக சோளப் புட்டு பற்றித்தான் 426 00:25:02,836 --> 00:25:04,338 பாடிக்கொண்டிருந்தீர்கள். 427 00:25:04,421 --> 00:25:06,465 யாராவது "சோளப் புட்டு" என்றீர்களா? 428 00:25:06,548 --> 00:25:08,008 போதும், கிளம்பலாம். 429 00:25:08,091 --> 00:25:10,761 -சரி, அது உனக்கானது. -'சோளப் புட்டு' 430 00:25:12,137 --> 00:25:13,805 நான் மோசமாக உணர்கிறேன், தெரியுமா? 431 00:25:13,889 --> 00:25:16,058 எல்லோரும் அன்பாக இருந்தார்கள். நாம் அவர்களிடம் விடைபெறவில்லை. 432 00:25:16,141 --> 00:25:17,559 மற்றொரு பாடல் தொடங்கும் ஆபத்து இருக்கிறது? 433 00:25:17,643 --> 00:25:18,852 அவர்கள் நன்றாக இருப்பார்கள். 434 00:25:23,106 --> 00:25:24,274 என்ன? 435 00:25:27,110 --> 00:25:28,278 கொஞ்சம் பொறு. 436 00:25:32,366 --> 00:25:33,867 இங்கே என்ன நடக்கிறது? 437 00:25:33,951 --> 00:25:37,329 -நாம் வெளியேற முடியாது போலிருக்கிறது. -கண்டிப்பாக நாம் வெளியேறலாம். 438 00:25:40,457 --> 00:25:42,417 சரி, இது வினோதமானது. 439 00:25:42,501 --> 00:25:44,545 இது மாயஜாலம் போல அல்லது... 440 00:25:44,628 --> 00:25:46,380 -இது மாயஜாலம் அல்ல. -பிறகு என்ன அது? 441 00:25:46,463 --> 00:25:49,258 தெரியவில்லை. இது ஏதோ தந்திர பாலம் போல தெரிகிறது. 442 00:25:49,341 --> 00:25:51,426 ஒரு தந்திர பாலமா? அது என்னவாக இருக்கும்? 443 00:25:51,510 --> 00:25:53,136 இதுவாக இருக்கும், சரியா? 444 00:25:55,597 --> 00:25:56,849 நான் முயற்சிக்கிறேன். 445 00:26:18,620 --> 00:26:20,205 இப்படி நடக்கக்கூடாது. 446 00:26:22,666 --> 00:26:25,544 என்ன நடக்கிறது, ஜோஷ்? என்ன இது? 447 00:26:28,088 --> 00:26:32,718 நீங்கள் ஷ்மிகடூனுக்குள் நுழைந்துவிட்டால் 448 00:26:32,801 --> 00:26:37,556 உங்களால் விரைவில் வெளியேற முடியாது என்பதுதான் உண்மை 449 00:26:37,639 --> 00:26:43,437 அதன் எல்லைகளுக்குள் பிணைக்கப்பட்டிருக்கிறீர்கள் 450 00:26:43,520 --> 00:26:48,609 நீங்கள் உண்மையான காதலை உணரும் வரை 451 00:26:49,401 --> 00:26:54,823 நீங்கள் அதை உணரும் வரை, இங்கேயே இருக்க வேண்டும் 452 00:26:55,532 --> 00:27:01,663 இங்கே வாழ்க்கை ஒவ்வொரு நாளும் இசைதான் 453 00:27:10,005 --> 00:27:11,298 அது குட்டிச்சாத்தானா? 454 00:27:13,091 --> 00:27:14,301 ஆம். 455 00:27:14,384 --> 00:27:15,719 ஆம். ம். 456 00:27:16,428 --> 00:27:18,180 அவன் ஏதோ சொன்னான். அவன் என்ன சொன்னான்? 457 00:27:18,889 --> 00:27:19,973 எனக்குத் தெரியாது. 458 00:27:20,057 --> 00:27:24,770 உலகில் உண்மை எது பொய் எது என்ற எனது முழு புரிதலையும் 459 00:27:24,853 --> 00:27:27,356 அவன் எப்படி சிதைக்கிறான் என்பதில் நான் அதிக கவனம் செலுத்தினேன், 460 00:27:27,439 --> 00:27:29,399 ஏனென்றால் அவன் ஒரு வினோதமான குட்டிச்சாத்தான். 461 00:27:30,275 --> 00:27:32,319 "வாழ்க்கை ஒவ்வொரு நாளும் இசைதான்." 462 00:27:36,949 --> 00:27:40,077 இது ஒன்றும் சுற்றுலா பயணிகளை மகிழ்விப்பதற்காக அல்ல. 463 00:27:40,160 --> 00:27:41,620 இது ஒரு இசை. 464 00:27:41,703 --> 00:27:43,997 நாம் ஒரு நிஜமான இசையில் இருக்கிறோம். 465 00:27:44,081 --> 00:27:45,707 ஓ, கடவுளே, இல்லை. 466 00:27:45,791 --> 00:27:48,752 நாம் நிஜமான காதலை உணரும் வரை மட்டுமே இங்கே இருப்போம் என்றான்... 467 00:27:48,836 --> 00:27:50,379 நான் உன்னை நேசிக்கிறேன். நீ என்னை நேசிக்கிறாயா? 468 00:27:50,462 --> 00:27:51,797 என்ன? ஆம், கண்டிப்பாக. 469 00:27:52,548 --> 00:27:54,842 இப்போது விதிகள் தெரியும் என்பதால் பாலத்தை மீண்டும் கடப்போம். 470 00:27:54,925 --> 00:27:56,218 ஆம். இப்போது தெரியும். 471 00:27:57,469 --> 00:27:58,637 நான் உன்னை நேசிக்கிறேன். 472 00:27:59,638 --> 00:28:01,098 நானும் உன்னை காதலிக்கிறேன். 473 00:28:01,181 --> 00:28:03,267 அதைக் கேட்டாயா, குட்டிச்சாத்தானே? 474 00:28:03,350 --> 00:28:04,685 நாங்கள் காதலிக்கிறோம். 475 00:28:20,284 --> 00:28:22,995 எங்கள் சிறிய நகரத்துக்கு வரவேற்கிறோம் 476 00:28:23,078 --> 00:28:25,289 இங்கே நீங்கள் நண்பர்களை சந்திக்கலாம் 477 00:28:26,498 --> 00:28:29,209 நீங்கள் ஒருபோதும் சிடுசிடுப்பை காண மாட்டீர்கள் 478 00:28:29,293 --> 00:28:32,254 -எல்லோருக்கும் வணக்கம். -ஹேய், பீட். 479 00:28:32,337 --> 00:28:38,802 நாங்கள் அழைப்பதை கண்டு நீங்கள் வியப்பீர்கள் என்று நம்புகிறோம் 480 00:28:38,886 --> 00:28:45,893 இது அனைத்திலும் மிக அழகான, அற்புதமான மாயாஜால இடம் 481 00:28:52,983 --> 00:28:55,986 ஷ்மிகடூன் 482 00:28:56,069 --> 00:28:59,531 ஜூலை முதல் ஜூன் வரை இங்கே சூரியன் பிரகாசமாக இருக்கும் 483 00:28:59,615 --> 00:29:02,951 அதோடு இனிப்பைப் போல காற்று இனிமையாக வீசும் 484 00:29:03,035 --> 00:29:05,579 ஷ்மிகடூன் 485 00:29:05,662 --> 00:29:06,663 ஷ்மிகடூன் 486 00:29:06,747 --> 00:29:09,791 இங்கே ஒரு ஆணாக மிகப்பெரிய மற்றும் பரந்த கனவுகளை காண முடியும் 487 00:29:09,875 --> 00:29:13,337 மேலும் ஒரு பெண் அவனது அருகிலேயே இருக்க முடியும் 488 00:29:13,420 --> 00:29:16,840 பெரியதோ சிறியதோ எல்லோருக்கும் நம்பிக்கை இருக்கிறது 489 00:29:16,924 --> 00:29:20,427 பயனற்றதென்று எதுவுமில்லை உங்கள் குடையை கொண்டு வாருங்கள் 490 00:29:20,511 --> 00:29:24,306 இதை நாங்கள் இப்படி அழைக்கிறோம் 491 00:29:24,389 --> 00:29:27,559 ஷ்மிகா 492 00:29:27,643 --> 00:29:31,188 ஷமிகா, ஷ்மிகா ஷ்மிகா, ஷ்மிகா 493 00:29:31,271 --> 00:29:37,819 ஷ்-மி-க-டூ-ஊ! 494 00:29:38,570 --> 00:29:41,615 ஷ்மிகடூன்! 495 00:29:41,698 --> 00:29:43,700 வசன தமிழாக்கம் அருண்குமார்